வருடாந்திர அமர்நாத் யாத்திரை வெள்ளிக்கிழமையன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான வானிலை மற்றும் பால்தால் பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பழுதுபார்ப்புப் பணிகள் காரணமாக, அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பஹல்காம் வழித்தடத்திலும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, வியாழன் இரவு பால்தால் பகுதியில் பலத்த மழை பெய்ததால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருப்பினும், உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான வானிலை மற்றும் நடைபெற்று வரும் பழுதுபார்ப்புப் பணிகள் காரணமாக, பால்தால் வழித்தடத்திலிருந்து புனித குகைக் கோயிலை நோக்கிச் செல்ல எந்தவொரு பக்தரும் அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
அமர்நாத் வருடாந்திர யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது. இயற்கையாக உருவாகும் பனி லிங்கம் அமைந்துள்ள இக்குகைக்கோயிலில் இதுவரை சுமார் 4.5 லட்சம் பக்தர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர்.
ரக்ஷா பந்தன் பண்டிகை நாளான ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் இந்த யாத்திரை நிறைவடைய உள்ளது.
The annual Amarnath yatra was suspended from the Baltal route on Friday due to inclement weather and to facilitate repair work on the track, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமர்நாத் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து: 39 பேர் காயம்!

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

மோசமான வானிலை: அமர்நாத், வைஷ்ணவ தேவி யாத்திரை 2-வது நாளாக நிறுத்தம்!

அமர்நாத் யாத்திரை: இதுவரை 1.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
விடியோக்கள்

அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்! நாடாளுமன்றத்தில் தொடரும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் போராட்டம்!




