/

அமர்நாத் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து: 39 பேர் காயம்!

அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து விபத்து பற்றி..

News image

அமர்நாத்

Updated On :28 ஜூலை 2026, 1:46 pm IST

ஜம்மு - காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஹரிகானிவான் நகரில் சென்ற சுற்றுலாப் பேருந்து சாலையிலிருந்து விலகியதால் 39 அமர்நாத் பக்தர்கள் காயமடைந்தனர்.

அமர்நாத் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இன்று காலை காந்தர்பால் மாவட்டத்தில் சென்ற சுற்றுலாப் பேருந்து சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து, மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி), ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பகுதியில் காயமடைந்த அனைத்து பயணிகளையும் மீட்டனர்.

விபத்து தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூற்றுப்படி,

அமர்நாத் தரிசனம் முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள், ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவையான அனைத்து உதவிகளையும், சிறந்த மருத்துவச் சிகிச்சையையும் உறுதி செய்யுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் ​​கூறினார்.

முன்னதாக, ஜூலை 27 அன்று, ஸ்ரீ அமர்நாத் பக்தர்களின் 20-வது குழுவினர், விரிவான பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடுகளுக்கு மத்தியில், தெற்கு காஷ்மீரில் உள்ள புனித குகைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் சந்தர்கோட்டைக் கடந்தனர்.

கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஆறு நாள்கள் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வானிலை, கள நிலவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆய்வைத் தொடர்ந்து, ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாம் தளத்திலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குப் புதிய பக்தர்கள் குழு புறப்பட்டதையடுத்து, யாத்திரை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியது.

ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த வருடாந்திர 57 நாள் யாத்திரை, ரக்ஷா பந்தன் அன்று ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிறைவடையும். நாடு முடிவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த புனித குகைக் கோயிலுக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர்.

39 Amarnath Yatri pilgrims were injured after a tourist bus skidded off the road at Hariganiwan in Jammu and Kashmir's Hariganiwan town in Ganderbal district on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.