அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி மீது கொடூர இனவெறித் தாக்குதல்
அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!
Published on
Updated on
1 min read

அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி மீது கொடூர இனவெறித் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், அயர்லாந்தில் வசித்து வரும் கேரளத்தைச் சேர்ந்த தம்பதியின் 6 வயது மகள் மீது அயர்லாந்து சிறுவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டு என்ற இடத்தில் வசித்து வந்த அனுபா அச்சுதனின் மகளான நியா (6), தங்கள் வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, 12 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் சிலர் சேர்ந்து நியாவை தாக்கியுள்ளனர்.

மேலும், நியாவை இந்தியாவுக்கே சென்று விடு என்றும் மிரட்டியதுடன், சிறுமியின் அந்தரங்க உறுப்பிலும் தாக்கியுள்ளனர்.

சிறுமி மீதான இந்தக் கொடூர இனவெறித் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அயர்லாந்தில் கடந்த இரு வாரங்களில் மட்டும் இந்தியர்கள் மீது 3 இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Summary

Racist Attack On Indian-Origin Girl In Ireland

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com