ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டால் ரூ. 76,500 கோடி இழப்பு ஏற்படலாம்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த நிலையில், இந்தியாவுக்கு 25 சதவிகித வரியை அறிவித்தார்.
இருப்பினும், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால், மேலும் 25 சதவிகித வரியை விதித்தார். டிரம்ப்பின் இந்த 50 சதவிகித வரிவிதிப்பானது, இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதார நாடுகளிடையேயும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நடப்பு நிதியாண்டில் எண்ணெய் இறக்குமதி செலவு ரூ. 76,500 கோடியாக அதிகரிக்கக் கூடும் என்றும், அடுத்த நிதியாண்டில் ஒரு லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆண்டுக்கு 1.79 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை இந்தியா வாங்குகிறது.
சந்தையில் ஒரு பீப்பாயின் விலை சுமார் 67 டாலராக இருக்கும் நிலையில், ரஷியாவிடம் இந்தியா சுமார் 47 டாலர் என்ற அளவிலேயே வாங்குகிறது.
மேலும், தற்போது ரஷியாவிடம் எண்ணெய் சில இந்திய நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எண்ணெய் வாங்குவதென்றால், 2 மாதங்களுக்கு முன்னதாகவே ஆர்டர் கொடுக்கப்படும். அப்படியென்றால், தற்போது இறக்குமதி செய்யவேண்டுமெனில், மே அல்லது ஜூன் மாதத்திலேயே ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், எண்ணெய் மீதான தள்ளுபடி காரணமாகவே தற்போது எண்ணெய் இறக்குமதி குறைந்திருப்பதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத் தலைவர் விகாஸ் கௌஷல் தெரிவித்தார். ஆகையால், டிரம்ப்பின் வரிவிதிப்பின் காரணமாக எண்ணெய் வர்த்தகம் நிறுத்தப்படவில்லை என்றும், தள்ளுபடி காரணமாகவே குறைந்திருப்பதாகக் கூறுகின்றனர்.
அதிக தள்ளுபடி வழங்கப்பட்டால், மீண்டும் ரஷியாவிடமே இந்திய நிறுவனங்கள் எண்ணெய் வாங்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதுமட்டுமின்றி, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் பெறப்படவில்லை என்று கூறிய விகாஷ், பொருளாதார காரணிகளைக் கொண்டு முடிவெடுக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.