
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - நீல்காந்த் சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மாயமாகியுள்ளனர்.
உத்தரகண்டில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரிஷிகேஷ் - நீல்காந்த் சாலையிலும், இன்று (ஆக.13) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கிய, மங்களூரைச் சேர்ந்த முஷீர் மற்றும் சுல்தான்பூரைச் சேர்ந்த அஜித் பால் ஆகியோர் மாயமானது உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கங்கை நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அதில் அவர்கள் இருவரும் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நிலச்சரிவு இடிபாடுகளிலும், கங்கை நதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மாயமான இருவரையும் தேடும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், காயமடைந்த 2 பேர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்த மாநில பேரிடர் மீட்புப் படைகள், சாலையை முடக்கியுள்ள கற்களை இயந்திரங்களின் உதவியுடன் அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.