
ஜம்மு - காஷ்மீர் மேகவெடிப்பு: 6வது நாளில் பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு! 75 பேர் மாயம்!
கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேகவெடிப்பில் பலியானோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து...

கிஷ்த்வாரில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள்... - PTI
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தில், கடந்த ஆக.14 ஆம் தேதி, மாலை ஏற்பட்ட மேகவெடிப்பினால், திடீரென வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் நீருக்குள் மூழ்கின.
இதையடுத்து, மலை மீது அமைந்துள்ள மசாலி மாதா கோயிலுக்கு செல்வதற்காக அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு தற்போது வெள்ளத்தில் பலியான பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதால், பலியானோரது எண்ணிக்கை மொத்தம் 66 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாயமான 75 பேரை தேடும் பணிகள் 6-வது நாளாக இன்றும் (ஆக.19) தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தப் பேரிடரில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், ராணுவம் உள்பட ஏராளமான படைகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு
Summary
The death toll in cloudburst floods in Jammu and Kashmir's Kishtwar district has risen to 64, it has been reported.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






