
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தொடர்ந்து அளவுக்கு அதிகமான கனமழை பெய்து வருவதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு ”ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்றும் (ஆக.19) கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், தார்வாட், சிக்கமகளூரு, பெலகாவி, கார்வார், ஹாசன், பிதார் மற்றும் மடிகேரி ஆகிய மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு மற்றும் ஷிமோகா ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன், வரும் ஆக.20 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கடலோரம் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கர்நாடக பேரிடர் மீட்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஹாசன் மாவட்டத்தின், ஷிராடி மலைப் பகுதியின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கனமழையால் கர்நாடகத்திலுள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணை மற்றும் மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி நீர்தேக்கங்களில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் 95,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.