நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றார் அஜய் குமார்!

மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார்.
Ajay Kumar Bhalla
அஜய் குமார் பல்லா
Published on
Updated on
1 min read

மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் இல. கணேசனின் மறைவைத் தொடர்ந்து, அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அசுதோஷ் குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பதவியேற்பு விழாவில் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, துணை முதல்வர்கள் டி.ஆர். ஜெலியாங் மற்றும் ஓய் பாட்டன், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பதவியேற்புக்குப் பிறகு அஜய் குமார் ஆளுநர் மாளிகையில் ரியோ தலைமையிலான மாநில அமைச்சரவையுடன் தனது முதல் சந்திப்பை நிகழ்த்தினார். பதவியேற்பு விழாவின் ஒரு பகுதியாக அவர் சடங்கு மரியாதை அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

தலைமைச் செயலாளர் சென்டியாங்கர் இம்சென் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பழங்குடி அமைப்புகள், தேவாலய பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மாநிலத்தின் புதிய அரசியலமைப்புத் தலைவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தன.

Summary

Manipur Governor Ajay Kumar Bhalla was on Monday sworn in as the 22nd governor of Nagaland at a function held at Raj Bhavan here.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com