
ஜம்மு - காஷ்மீரில், புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் பெய்த கனமழையால், மலை மீது அமைந்துள்ள புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் நேற்று (ஆக.26) நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கையானது 34 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, கனமழை தீவிரமடைந்துள்ளதால், ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் ஆற்றின் நடுவே இருந்த பாலங்கள், மின் கம்பங்கள் மற்றும் மொபைல் கோபுரங்கள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில், ஜம்முவில் அடுத்த 40 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நீர்நிலைகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக, கிஷ்த்வார் - தோடா தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.