
மும்ப்ராவில் பையில் இருந்து கிட்டத்தட்ட 200 வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவில் விநாயகர் சதுர்த்தி நிறைவடைந்ததைத்தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணியின்போது பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த பையை திறந்து பார்த்துள்ளனர்.
அதில் 200 வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
உடனே காங்கிரஸ் தொகுதித் தலைவர் நிலேஷ் பாட்டீல் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது வாக்காளர் அடையாள அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பல முகவரிகள் இல்லை என்பதைக் அவர்கள் கண்டு பிடித்தனர்.
அதைத்தொடர்ந்து இந்த ஆவணங்களை 149 பேரவைத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரி சந்தீப் தோரட்டிடம் சமர்ப்பித்த காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு, உயர்மட்ட விசாரணை வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்ப்ராவில் பையில் இருந்து கிட்டத்தட்ட 200 வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.