
தில்லியில், 26 ஆண்டுகளாக இளைஞர் ஒருவரின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர்.
தில்லியில், 33 வயதுடைய இளைஞர் ஒருவர் சமீபத்தில் தொடர் இருமல் மற்றும் சளியில் ரத்தக் கசிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மருத்துவர்கள் மேற்கொண்ட எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளின் மூலம், அவரது நுரையீரலின் பேனா மூடி ஒன்று சிக்கியுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து, மருத்துவமனை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருந்ததாவது:
“அந்த இளைஞர் 7 வயது சிறுவனாக இருந்தபோது, விளையாட்டாக பேனா மூடியை விழுங்கியுள்ளார். ஆனால், அப்போது அது அவரது உடல் நிலையில் எந்தவொரு பாதிப்பையும் உருவாக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவர் சபியாசாச்சி பாய் தலைமையிலான குழுவினர், அறுவைச் சிகிச்சையின் மூலம், 26 ஆண்டுகளாக அவரது நுரையீரலில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் பேனா மூடியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
இதுபோன்ற, சம்பவங்கள் இந்தியாவில் மிகவும் அரிது எனவும், நுரையீரலில் இத்தனை ஆண்டுகளாக சிக்கியிருந்த பொருளானது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படுத்தாமல் இருந்தது மிகவும் அதிசயமான ஒன்று எனவும், மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: உதய்பூரில் நிகழ்ந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ காயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.