
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னைகள் முடிவிலாமல் நீண்டுகொண்டே இருக்கும்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அந்நாட்டு துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிச்சை எடுக்காது. இருப்பினும், இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளிலும் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.
ஜம்மு - காஷ்மீர் பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளிலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.
இந்தியாவுடனான மோதலில், வான் மற்றும் நிலத்திலும் பாகிஸ்தான் தங்கள் வலிமையை நிரூபித்தது. மேலும், தங்கள் மீதான எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் முழுமையான பதிலளிக்கப்படும் என்று எச்சரித்தது.
கடல்வழியாகக்கூட இந்தியாவுக்கு முழு பலத்துடன் பதிலடி பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: கேரளம்: மாட்டிறைச்சிக்குத் தடை! வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.