நடனமாடி ஓணம் கொண்டாடிய தில்லி முதல்வர் ரேகா குப்தா!

தில்லி முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில், முதல்வர் ரேகா குப்தா கலந்துகொண்டு நடனமாடிய விடியோ வைரல்.
நடனமாடி ஓணம் கொண்டாடும் முதல்வர் ரேகா குப்தா
நடனமாடி ஓணம் கொண்டாடும் முதல்வர் ரேகா குப்தாANI
Published on
Updated on
1 min read

தில்லி முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில், முதல்வர் ரேகா குப்தா கலந்துகொண்டு சக பெண்களுடன் நடனமாடிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆக. 26 ஆம் தேதி தொடங்கிய ஓணம் கொண்டாட்டம் செப். 5ஆம் தேதியுடன் பிரமாண்டமாக நிறைவடைகிறது.

அந்தவகையில், தில்லி முதல்வர் அலுவலகத்தில் இன்று ஓணம் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், தில்லியில் வசித்துவரும் மலையாள குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அவர்களுடன் முதல்வர் ரேகா குப்தாவும் கலந்துகொண்டு கேரளத்தின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுடன் முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது,

''ஓணம் பண்டிகை கேரளத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும், ஏன்? உலகம் முழுவதும் கூட கொண்டாடப்படுகிறது. மலையாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுக்க உள்ளனர். தில்லியில் 10 லட்சம் மலையாளக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கு ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: 12 மணி நேரத்தில் பாலம் கட்டிய ராணுவம்!

Summary

Delhi CM Rekha Gupta dances with a group of women as she celebrates Onam at her residence in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com