

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வருகை தர உள்ள நிலையில், தில்லியில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவிலிருந்து டிச. 4-இல் புதின் புது தில்லி வருகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரும் அவர் இந்தியா - ரஷியா இருநாட்டு உறவுகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து, தில்லியில் கண்காணிப்பு பணிகளில் பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் தீவிரமாக ஈடுபட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பாதுகப்பு படையின் பல்வேறு பிரிவுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ட்ரோன்கள், சிசிடிவி கேமிராக்கள், தொழில்நுட்ப கண்காணிப்புகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, ரஷியாவிலிருந்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் ரோந்து குழுக்களைச் சார்ந்த 50 அதிகாரிகள் கொண்ட குழு விரைவில் தில்லி வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தில்லியில் மேர்கொள்ளப்பட்டுளள பாதுகாப்பு விவரங்களை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத விதத்தில், பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டிருப்பதாக தில்லி போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.