கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தில்லி பயணம்! காரணம் என்ன?

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தில்லிக்குச் சென்றுள்ளது குறித்து...
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் (கோப்புப் படம்)
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் (கோப்புப் படம்)ENS
Updated on
1 min read

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் திடீரென தில்லிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததால், முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பேசுப்பொருளாகின.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கு கட்டுப்படுவோம் என்று முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூட்டாக அறிவித்தனர்.

இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் திடீரென இன்று (டிச. 3) தில்லிக்குச் சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது. ஆனால், இந்தப் பயணத்தில் எந்தவொரு அரசியல் காரணமும் இல்லை என டி.கே. சிவக்குமார் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

“தில்லிக்கு வந்ததற்குப் பின்னால் எந்தவொரு அரசியல் காரணங்களும் இல்லை. நான் இங்கு எனது நண்பர் ஒருவரின் மகன் திருமணத்திற்காக வந்துள்ளேன். மேலும், டிச.14 ஆம் தேதி வாக்குத் திருட்டுக்கு எதிராக நடைபெறவுள்ள பேரணிக்கான ஏற்பாடுகளை நான் செய்ய வேண்டும்.

இந்தப் பேரணியில் கர்நாடகத்தில் இருந்து 10,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

இத்துடன், நாளை அதிகாலையே மீண்டும் கர்நாடகம் திரும்புவதாகக் கூறிய துணை முதல்வர் சிவக்குமார் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் நாடாளுமன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் இந்தப் பயணத்தில் யாரையும் சந்திக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரஷிய அதிபர் புதின் நாளை இந்தியா வருகை! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Summary

Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar has reportedly suddenly left for Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com