கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

கோவா தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!
Updated on
1 min read

கோவா தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கோவா, அர்போரா பகுதியில் உள்ள இரவு விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகக் கூறினார்.

மேலும், தீவிபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 நிவாரணமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தீவிபத்தில் 3 பேர் தீக்காயங்களால் உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுதி சமையலறை ஊழியர்கள் என்றும், சுற்றுலாப் பயணிகள் 4 பேர் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

Summary

Goa nightclub tragedy: PM announces ex gratia of Rs 2 lakh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com