நாளை(டிச. 9) எஸ்ஐஆர் விவாதத்திற்கு முன்பு பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்!

பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது பற்றி...
NDA Parliamentary Party meeting to be held on Tuesday
BJP meetingகோப்புப்படம்
Updated on
1 min read

பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(டிச. 9, செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த டிச. 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான விவாதம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்கவுள்ளதாகவும் இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும் என்றும் நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் பதிலளித்து பேசவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை(டிச. 9) கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிச. 9, செவ்வாய்க்கிழமை காலை 9. 30 மணிக்கு நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Summary

NDA Parliamentary Party meeting to be held on Tuesday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com