

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித்திட்டம் என்று நடிகர் திலீப் கூறியிருக்கிறார்.
கேரளத்தில் முன்னணி நடிகை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்ட நடிகர் திலீப், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், கடந்த 2017ஆம் ஆண்டு ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தூண்டியதாகக் கூறி நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகீயோர் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். 85 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் திலீப், பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று 6 பேர் குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பரை விடுதலை செய்திருக்கிறது. இவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
அப்போது அவர் கூறியதாவது, நடிகை பாலியல் வழக்கு எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம். இந்த வழக்கில் எனக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறேன் என்று நடிகர் திலீப் கூறியிருக்கிறார்.
முன்னதாக, நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பாக நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டது கேரளத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருந்தது.
இதையும் படிக்க.. 50 காசு நாணயம்! பயன்பாட்டிலிருந்து மறைந்தாலும் சட்டப்படி செல்லும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.