

நக்சலிசம் விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குற்றம் சாட்டினார்.
இந்தூரில் முதல்வர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
காங்கிரஸ் கட்சி பழிசுமத்தும் அரசியலில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளது, அதன் முந்தைய அரசுகள் நக்சலிசம் போன்ற பிரச்னைகளைத் தொடர அனுமதித்துவிட்டன.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நக்சலிசம் மாநிலத்தில் ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. நாங்கள் இந்தப் பிரச்னையை வேரோடு ஒழித்துவிட்டோம்.
மாநிலத்தின் மாண்ட்லா, பாலாகாட் மற்றும் திண்டோரி மாவட்டங்கள் கிட்டத்தட்ட நக்சலிசம் இல்லாத மாவட்டங்களாக உள்ளன. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது, நக்சலைட்டுகள் அமைச்சர் ஒருவரைக் கொன்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
நக்சலிசப் பிரச்னைக்கு மூல காரணம் அப்போதைய மாநில முதல்வர்தான். அவர்தான் இன்றும் அவர்தான் இன்றும் (நக்சலைட் தளபதி) மாட்வி ஹிட்மாவின் கொலைக்காக வருத்தம் தெரிவிக்கிறார்.
இந்த மனப்பான்மை காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று திக்விஜய் சிங்கை நேரடியாகப் பெயரிடாமல் இவ்வாறு கூறினார்.
மோகன் யாதவ் டிசம்பர் 13, 2023 அன்று மத்தியப் பிரதேசத்தின் 19வது முதல்வராகப் பதவியேற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் நலனுக்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது, தொழில்துறை வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியை விஞ்சிவிட்டது என்றும் முதல்வர் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தை நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலமாக மாற்றுவதை நோக்கி தனது அரசு செயல்பட்டு வருவதாக யாதவ் கூறினார்.
இதையும் படிக்க: சபரிமலையில் குவியும் பக்தர்கள்! தரிசன நேரம் நீட்டிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.