

சிம்லாவில் பாஜகவின் புதிய அலுவலகத்தைத் தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா அடிக்கல் நாட்டினார்.
பாஜக புதிய அலுவலகமானது சிம்லா கிராமப்புற சட்டப்பேரவைத் தொகுதியில் ஜுப்பரஹட்டி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மஜ்தாய் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
அலுவலகத்திற்கான நிலத்தை ஆய்வு செய்த நட்டாவிடம் , பிந்தால் கட்டடத் திட்டம் குறித்த விரிவான விளக்கத்தை அளித்தார். அதைத் தொடர்ந்து அலுவலக வளாகத்தின் கட்டமைப்பு, செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் எதிர்காலப் பயன்பாடு குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.
ஐந்து புரோகிதர்களால் வேத மந்திரங்கள் முழங்க நடத்தப்பட்ட இந்த விழா சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அதன்பிறகு கலச ஸ்தாபனம் (கலச பிரதிஷ்டை) சடங்கு செய்யப்பட்டது.
பின்னர், நட்டா கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கட்சி அமைப்பை வலுப்படுத்துவது மற்றும் வரவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதிய பாஜக அலுவலகத்தின் முதல் செங்கல்லை வைத்த நட்டாவுடன், எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர், மாநில பாஜக தலைவர் ராஜீவ் பிந்தால், மாநில பொறுப்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா, இணைப் பொறுப்பாளர் சஞ்சய் டாண்டன், அமைப்புப் பொதுச் செயலாளர் சித்தார்த்தன், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், முன்னாள் மாநில பாஜக தலைவர் சுரேஷ் காஷ்யப் மற்றும் பல பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு, நட்டா, ஜெய்ராம் தாக்கூர் மற்றும் ராஜீவ் பிந்தால் ஆகியோருடன் துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்திரியின் வீட்டிற்குச் சென்று, அவரது மகளின் திருமணத்திற்காக அக்னிஹோத்திரிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிக்க: மெஸ்ஸி இந்தியா வருகை! கொல்கத்தாவில் ஒருநாள் அறை வாடகை எவ்வளவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.