

கொல்கத்தா சால்ட் லேக் திடலில் மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மெஸ்ஸியைப் பார்க்க ரூ.10 லட்சம் செலவிட்ட நிலையில் மனமுடைந்த ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று அதிகாலை கொல்கத்தா வந்த லியோனல் மெஸ்ஸி முதலில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
பின்னர், சால்ட் லேக் திடலுக்கு வந்தார். அங்கு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்ததாக மோகன் பகான் அணியின் மெஸ்ஸி ஆல் ஸ்டார் அணியும் டையமண்ட் ஆர்பர் ஆல் ஸ்டார் அணியும் விளையாட இருந்தது.
மெஸ்ஸி சால்ட் லேக் திடலை விட்டு சென்றதால், ரசிகர்கள் நாற்காலிகளை தூக்கி வீசத் தொடங்கினார்கள்.
இதனால் சால்ட் லேக் திடலே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
ரசிகர் ஒருவர் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
விழாவை மிகவும் மோசமாக ஏற்பாடு செய்துள்ளார்கள். இங்கு வந்திருப்பவர்கள் எல்லாமே கால்பந்து ரசிகர்கள்.
அனைவரும் மெஸ்ஸியைப் பார்க்கவே வந்திருக்கிறோம். ஆனால், இங்கு நடந்திருப்பது முழுமையான ஊழல். எங்களுக்கு பணம் திருப்பித் தர வேண்டும்.
கொல்கத்தா கால்பந்துக்கு புகழ்பெற்றது. விழா ஏற்பட்டாளர்கள் மிகவும் மோசம். இது கொல்கத்தாவின் கறுப்பு நாள். நாங்கள் கால்பந்தை, ஆர்ஜென்டீனாவை நேசிக்கிறோம்.
இந்த அனுபவம் முழுமையான ஸ்கேம். அமைச்சரும் அவரது குழந்தைகள் மட்டுமே உடன் இருக்கிறார்கள். மற்றவர்கள் யாருமே பார்க்க முடியவில்லை. நாங்கள் மிகவும் மனமுடைந்துள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.