

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், பாஜக உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பாஜக வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது.
எதிர்காலத்தில் கேரளத்தில் பாஜக மேலும் பல முன்னேற்றங்களைப் பெறும் என நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டார். கேரளத்தில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தோ்தலில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) பெரும் பின்னடைவைச் சந்தித்தது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4, இடதுசாரி, தேசிய ஜனநாயக கூட்டணிகள் தலா ஒரு மாநகராட்சியைக் கைப்பற்றின.
கேரளத்தில், கடந்த ஆண்டு தனது முதல் எம்.பியை பெற்ற பாஜக, சனிக்கிழமை சிபிஐ (எம்) கட்சியிடமிருந்து திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி, 45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் வசம் இருந்த கோட்டையை தகர்த்துள்ளது.
கேரளத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக பாா்க்கப்பட்ட இத்தோ்தல் முடிவுகளால் காங்கிரஸ் கூட்டணி உற்சாகமடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.