

கோவா - தில்லி விமானப் பயணத்தில் நடுவானில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரை கர்நாடக முன்னாள் பெண் எம்எல்ஏ காப்பாற்றியிருக்கிறார்.
வாக்குத் திருட்டு விவகாரத்துக்கு எதிராக தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க கர்நாடக முன்னாள் எம்எல்ஏ அஞ்சலி நிம்பால்கர் கோவா - தில்லி விமானத்தில் சென்றிருக்கிறார்.
அப்போது அதில் பயணித்த அமெரிக்கப் பெண் பயணி ஒருவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். தொழில் ரீதியில் மருத்துவரான கர்நாடக முன்னாள் எம்எல்ஏ அஞ்சலி நிம்பால்கர், உடனே அமெரிக்கப் பெண் பயணிக்கு சிபிஆர் செய்து அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.
தொடர்ந்து அஞ்சலி நிம்பால்கர் விமானப் பயணம் முழுவதும் நோயாளிக்கு அருகிலேயே இருந்து அவரை நன்கு கவனித்துக்கொண்டார். தில்லியில் விமானம் தரையிறங்கிய உடனேயே, உடல்நிலை சரியில்லாத அந்த வெளிநாட்டுப் பயணி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சரியான நேரத்தில் வெளிநாட்டுப் பயணியின் உயிரை காப்பாற்றிய அஞ்சலி நிம்பால்கரின் செயலை சக பயணிகள் உள்பட அனைவரும் பாராட்டினர். மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் பாராட்டியுள்ளார். முதல்வருக்கு நன்றி தெரிவித்த நிம்பால்கர், ஒரு மருத்துவராக தனது கடமையைச் செய்ததாக பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.