

ஹரியாணா நெடுஞ்சாலையில் கடும் மூடுபனி காரணமாக பல பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர்.
ஹரியாணா மாநிலம், ரேவரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரிய சாலை விபத்து ஏற்பட்டது. அடர்த்தியான மூடுபனியால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் பல பேருந்துகள் மோதிக்கொண்டன.
விபத்தில் பல பயணிகள் காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் நடந்த உடனேயே அங்கு விரைந்த போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விபத்துக்கான காரணம் குறைந்த தெரிவுநிலையே என்று முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது, இருப்பினும் முழுமையான விசாரணைக்குப் பிறகே சரியான காரணங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவலின்படி, கடுமையான மூடுபனி காரணமாக ஏற்பட்ட மோசமான தெரிவுநிலையால் அதிகாலையில் மூன்று முதல் நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. விபத்து நடந்தபோது, ரேவரியிலிருந்து ஜஜ்ஜார் நோக்கி பேருந்துகள் பயணித்தன.
இதனிடையே கிரேட்டர் நொய்டாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 91 இல் ஞாயிற்றுக்கிழமை சுமார் அரை டஜன் வாகனங்கள் மோதிக்கொண்டதில் பல வாகனங்கள் சேதமடைந்தன. சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சேதமடைந்த வாகனங்களை சாலையில் இருந்து அகற்ற கிரேன்களைப் பயன்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், அடர்ந்த மூடுபனிதான் விபத்துக்கு முதன்மையான காரணம் என்று தெரிகிறது. வாகனங்கள் நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட பிறகு வழக்கமான போக்குவரத்து தொடங்கப்பட்டது என்று போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.