

தில்லி செங்கோட்டை நாளை (டிச. 16) முதல் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச., 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் திறக்கப்படவுள்ளது.
இந்திய தொல்பொருள் ஆய்வு மைய உயரதிகாரிகள் அளித்த தகவலின்படி,
ஐக்கிய நாடுகள் அவையின் துணை அமைப்பான யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியத்தைக் காக்கும் அரசுகளுக்கிடையிலான குழுவின் 20வது ஆண்டு அமர்வு செங்கோட்டையில் நடைபெற்றது.
டிசம்பர் 8 - 13 வரை நடைபெற்ற இந்த நிகழ்வையொட்டி, டிசம்பர் 5 முதல் 14 ஆம் தேதி வரை செங்கோட்டையில் பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. டிசம்பர் 15ஆம் தேதியான இன்றும் செங்கோட்டை திறக்கப்படவில்லை. எனினும் நாளை முதல் பார்வையாளர்களுகள் செங்கோட்டையை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னரான ஷாஜஹானால் கட்டப்பட்ட செங்கோட்டை, பழைய தில்லியின் முக்கிய வரலாற்று இடங்களில் ஒன்றாக உள்ளது.
செங்கோட்டைக்கு எதிரில் புகழ்பெற்ற சாந்தினிசெளக் இருப்பதால் அதிக எண்ணிக்கையிலானோர் இப்பகுதிக்கு நாள்தோறு வருகைப்புரிவது வழக்கம்.
செங்கோட்டையை பார்வையிட பார்வையாளர்களுக்கு நாளைமுதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பும் மற்றும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயர் மாற்றம்! வலுக்கும் எதிர்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.