மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயர் மாற்றம்! வலுக்கும் எதிர்ப்பு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு...
MGNREGA
ENS
Updated on
1 min read

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயர் மாற்றப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கிராமப்புறத்தில் உள்ள 18 வயது நிரம்பியவர்கள் இதில் பயன்பெறலாம். 100 நாள்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை நீக்கிவிட்டு, 'கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான வளர் இந்திய உறுதியளிப்புத் திட்டம் (The Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) - VB GRAM G) என்ற பெயரில் மத்திய அரசு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான மசோதா இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வெளியான மக்களவை பணிகளின் பட்டியலில் இந்த மசோதாவின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய திட்டத்தின்படி வேலை நாள்கள் 100 நாள்களில் இருந்து 125 நாள்களாக உயர்த்தப்பட உள்ளதாகவும் அதேபோல ஊதியமும் உயர்த்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு அதிகரித்துள்ளதால் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கி வந்த 90% நிதியை 60% ஆக குறைக்கவும் மீதியுள்ள 40% நிதியை மாநில அரசு ஏற்கவும் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நம் நாட்டின் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது ஏன்? அதனால் என்ன பலன் இருக்கிறது? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஒரு திட்டத்தின் பெயர் மாற்றப்படும்போது அலுவலகங்கள், பொருள்கள் என அதிக செலவு ஆகும் என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்களும் இதுகுறித்து நாடாளுமன்ற அவைகளிலேயே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி அவரை அவமதிப்பு செய்வதாக மற்ற கட்சியினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

Summary

Govt under fire over new rural employment bill, opposition asks why Mahatma Gandhi's name dropped

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com