

இந்தியாவுக்கு வருகைப்புரிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விகிதம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 9.67 லட்சம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 26.15 லட்சத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் 16.48 லட்சமாகக் குறைந்துள்ளது. எனினும் மூன்றாவது காலாண்டில் சற்று அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த காலாண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட சரிவையும், அந்தச் சரிவுக்குக் காரணமான காரணிகளின் விவரங்களையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டதா? என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மக்களவையில் இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முதல் மூன்று காலாண்டில் இந்தியாவுக்கு வருகைப்புரிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 61.83 லட்சமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 26.15 லட்சத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் 16.48 லட்சமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். மூன்றாவது காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) 19.20 லட்சமாக சற்று அதிகரித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறை, அதனால் பயண வழிப்பாதையில் ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இதையும் படிக்க | தில்லி செங்கோட்டை நாளை முதல் மீண்டும் திறப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.