

தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9-வது குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9-வது குற்றவாளியாக ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த யாசின் அகமதுவை, தில்லியில் தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்தனர்.
இந்த நிலையில், பட்டாலியா பட்டியாலா நீதிமன்றத்தின் முதன்மை மாவட்ட அமர்வில் சிறப்பு நீதிபதி பிரசாந்த் சர்மா முன்பாக யாசினை, இன்று (டிச. 18) என்ஐஏ முன்னிலைப்படுத்தினர்.
விசாரணையின்போது, யாசினை காவலில் விசாரிக்க என்ஐஏ கோரியபோது, யாசின் அகமதுவை டிசம்பர் 26 ஆம் தேதி வரையில் என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தில்லியில் கடந்த நவ.10-ஆம் தேதி மருத்துவா் உமா் நபி வெடிபொருள்களுடன் ஓட்டி வந்த காா் செங்கோட்டை அருகே வெடித்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா்.
இதையும் படிக்க: இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.