

உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி ராம் வான்ஜி சுதார், வயது மூப்பினால் கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நொய்டாவில் உள்ள அவரது இல்லத்தில் சிற்பி ராம் வி சுதார் புதன்கிழமை (டிச. 17) நள்ளிரவு காலமானதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிற்பி ராம் வான்ஜி சுதாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், மறைந்த சிற்பி ராம் சுதாரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை வடிவமைத்து உருவாக்கிய சிற்பி ராம் வி சுதார், அயோத்தி கோயிலின் ராமர் சிலை உருவாக்கத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.