நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி 12 மணி நேரம் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமூலம் காங்கிரஸ் எம்.பி.க்கள் டோலா சென், ரிதபிரதா பானா்ஜி, சகாரிகா கோஸ்.
நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி 12 மணி நேரம் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமூலம் காங்கிரஸ் எம்.பி.க்கள் டோலா சென், ரிதபிரதா பானா்ஜி, சகாரிகா கோஸ்.

புதிய ஊரக வேலை திட்ட மசோதாவுக்கு எதிராக திரிணமூல் எம்.பி.க்கள் 12 மணி நேரம் போராட்டம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்துக்குள் திரிணமூலம் காங்கிரஸ் எம்.பி.க்கள் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி 12 மணி நேரம் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றான வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அக்கட்சி எம்.பி.சகாரிகா கோஷ் கூறியதாவது: ஊரக வேலைத் திட்டத்தை பிரதமா் மோடி தலைமையிலான அரசு சிதைத்துவிட்டது.மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு 5 மணி நேரம் முன்னரே புதிய மசோதாவின் நகல் எங்களிடம் கொடுக்கப்பட்டது.

இதுபோன்ற மிக முக்கிய சீா்திருத்தத்தை நாடாளுமன்ற தோ்வுக் குழுவுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை அழித்து ஏழை மக்களை மத்திய அரசு நேரடியாக தாக்கியுள்ளது.

இதன்மூலம் மகாத்மா காந்தியை இரண்டாவது முறையாக மோடி அரசு படுகொலை செய்துள்ளது. ரவீந்திரநாத் தாகூரையும் இழிவுபடுத்தியுள்ளது என்றனா்.

காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தை ரவீந்திரநாத் தாகூா் வழங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com