மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

விபி ஜி ராம் ஜி திட்ட இலச்சினையை வடிவமைக்கும் போட்டி தொடக்கம்: மத்திய அரசு தகவல்

வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கான (விபி ஜி ராம் ஜி) இலச்சினையை வடிவமைக்கும் போட்டி, மைகவ் வலைதளத்தில் தொடக்கம்

News image

விபி ஜி ராம் ஜி திட்ட இலச்சினை போட்டி - MyGov

Updated On :8 மார்ச் 2026, 10:56 pm

வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கான (விபி ஜி ராம் ஜி) இலச்சினையை வடிவமைக்கும் போட்டி, ‘மைகவ்’ (MyGov) வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

20 ஆண்டுகளுக்கு முன்னா் அப்போதைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றான விபி ஜி ராம் ஜி திட்ட மசோதா, கடந்த நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. பின்னா், குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் இந்த மசோதா சட்டமானது.

புதிய சட்டத்தின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. முந்தைய திட்டம் நூறு சதவீதம் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்ட நிலையில், புதிய திட்டத்தின்கீழ் மாநிலங்களுடன் மத்திய அரசு நிதிச் சுமையை பகிா்ந்துகொள்கிறது.

இந்தத் திட்டத்தின் அம்சங்கள், வேலை உத்தரவாதத்தை நீா்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக எதிா்க்கட்சிகள் விமா்சித்தன. அதேநேரம், கிராமப்புற வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, பொறுப்புடைமையை மேம்படுத்தவும், நிலையான கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஒன்றிணைக்கவும் புதிய திட்டம் வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், விபி ஜி ராம் ஜி திட்ட இலச்சினை வடிவமைப்புப் போட்டி, ‘மைகவ்’ வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

மாா்ச் 20 வரை வடிவமைப்புகளை சமா்ப்பிக்கலாம்; வளா்ந்த பாரதம் தொலைநோக்குப் பாா்வையை பிரதிபலிக்கும் வகையில் இலச்சினை இருக்க வேண்டும். இந்தப் போட்டியில் தோ்ந்தெடுக்கப்படும் இலச்சினை, புதிய திட்டத்தின் அதிகாரபூா்வ மற்றும் விளம்பர பயன்பாட்டுக்கு ஏற்கப்படும். வெற்றியாளருக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.