விபி ஜி ராம் ஜி தீர்மானம் நிறைவேற்றம்! பிரதமரிடம் இபிஎஸ் வலியுறுத்த முதல்வர் கோரிக்கை!

விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிரான தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது பற்றி...
Resolution passed in tamilnadu assembly against the VB G Ram G scheme
விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிரான தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது
Updated on
1 min read

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை(MGNREGA) மாற்ற வகைசெய்யும், மத்திய அரசின் வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு(விபி ஜி ராம் ஜி) நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய திட்டத்தின்படி, ஓராண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்த சிறப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊரக வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியும் வேலைக்கான வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

தீர்மானத்தின் மீது பல்வேறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசியதைத் தொடர்ந்து தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுபற்றி முதல்வர் பேசுகையில், "பிற்படுத்தப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களின் சமூக பாதுகாப்பு தகர்ந்திட கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் இந்த புதிய திட்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழக கொண்டுவந்த தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். அவர்களுக்கு நன்றி.

பிரதமர் தமிழகம் வருவதால் எதிர்க்கட்சித் தலைவர் அவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். இந்த திட்டம் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் வைத்த கருத்துகளை, எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், பிரதமரிடம் எடுத்துச் சொல்வார் என எதிர்பார்க்கிறான். இங்குள்ள அனைவரும், தமிழ்நாடு மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்" என்று கூறினார்.

பின்னர் பேரவையில் இந்த சிறப்புத் தீர்மானத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

இணைப்பு
PDF
விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிரான தீர்மானம் - முதல்வர் உரை
பார்க்க
Summary

Resolution passed in tamilnadu assembly against the VB G Ram G scheme

Resolution passed in tamilnadu assembly against the VB G Ram G scheme
விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com