

விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக நாளை(ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் மக்களவையில் கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய மசோதாவின்படி, ஓராண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் இருப்பதாகவும், மகாத்மா காந்தி பெயர் நீக்குவதற்கும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நாளை(ஜன. 23) சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்.
"விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. நாளை இதுதொடர்பாக அரசின் சார்பில் ஒரு சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. எனவே தீர்மானத்தின் மீது விரிவாக பேசுவோம்" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.