விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம்...
mk stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated on
1 min read

மத்திய அரசின் விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

100 நாள் வேலைத்திட்டம் மகாத்மா காந்தியின் பெயரிலேயே மத்திய அரசு தொடர வலியுறுத்தி கொண்டுவந்த தனித் தீர்மானம் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை(MGNREGA) மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதா(விபி ஜி ராம் ஜி) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய திட்டத்தின்படி, ஓராண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்த சிறப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

வேலைக்கான வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்; தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு மாநில செயல் திறன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Resolution introduced against VB G RAM G in tamilnadu assembly

mk stalin
தேர்தல் சீசனில் மட்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com