பிரபல மலையாள இயக்குநரும் நடிகருமான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.
புகழ்பெற்ற மலையாள நடிகர், திரைப்பட இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் (69 வயது) உடல்நலக்குறைவால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச. 20) காலமானார்.
இவருக்கு விமலா என்ற மனைவி, மலையாளத்தில் பிரபல இயக்குநர் - நடிகராக இருக்கும் வினீத் ஸ்ரீவாசன் என்ற மூத்த மகனும், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தியான் ஸ்ரீனிவாசன் என்ற இளைய மகனும் உள்ளனர்.
ஸ்ரீனிவாசன் மறைவையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்களும் எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீனிவாசன் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். தேசிய விருது பெற்ற வடக்கினோக்கியந்திரம், சிந்தாவிஷ்டயாய ஷியாமளா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். 6 முறை கேரள மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் திரைக்கதை, வசனம் எழுதிய பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. 48 ஆண்டு காலம் அவர் சினிமாவில் பணியாற்றியுள்ளார். காமெடி கலந்து திரைக்கதை எழுதுவதில் வல்லவர். மோகன்லாலுடன் பல படங்களில் நடித்துள்ளார். மகன் வினீத் ஸ்ரீனிவாசனுடனும் பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில் லேசா லேசா, புள்ளகுட்டிக்காரன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.