இயேசு கிறிஸ்து காட்டிய பாதையில்..! - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.(கோப்புப் படம்)
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து பிறந்தநாளான கிறிஸ்துமஸ் திருநாள், வியாழக்கிழமை (டிச. 25) உலகெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மக்களுக்கு கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செய்தி வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தியில்,

“மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் திருநாளான கிறிஸ்துமஸ், அன்பு மற்றும் கருணையின் செய்தியைப் பறைசாற்றுகின்றது. மனிதகுலத்திற்கான இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நமக்கு நினைவூட்டுகின்றது.

இந்தப் புனித திருநாள் அமைதி, நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சேவை ஆகிவற்றின் மதிப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு நம்மை ஊக்குவிக்கின்றது. இயேசு கிறிஸ்து காட்டிய பாதையில் கருணை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க நாம் உறுதியளிப்போம்” எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், அவர் வெளியிட்ட செய்தியில், கிறிஸ்துவ சமூகத்தின் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர் சிஆர்பிஎஃப் முகாமில் சிறுத்தைத் தாக்குதல்! வீரர் ஒருவர் படுகாயம்!

Summary

President Droupadi Murmu has extended Christmas greetings to the people of the nation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com