

ஹரியாணாவில் 10 பாம்புகளைக் கொன்று மரத்தில் தொங்கவிட்ட நபரால் பரபரப்பு காணப்பட்டது.
ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் நபர் ஒருவர் 10 பாம்புகளைக் கொன்று அவற்றை மரத்தில் தொங்கவிட்டுள்ளார். இதனைக் கண்டதும் அப்பகுதியில் மக்கள் கூடினர். நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார் பாம்புகளை மீட்டு வனத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் கூறுகையில், அந்த நபர் தனது வீட்டின் அருகே உள்ள மண் குடிசையில் இருந்து மாட்டுச் சாணக் கட்டிகளை அகற்றிபோது, அத்தனைப் பாம்புகளும் வெளியே வந்துள்ளது.
பாம்புகளை அந்த இடத்திலேயே கொன்று, புன்ஹானா–ஹோடல் சாலையோரத்தில் உள்ள மரத்தில் பிறகு அவற்றை தொங்கவிட்டதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட பாம்புகள் சுமார் ஒரு அடி முதல் ஏழு அடி வரை நீளமுடையவையாக இருந்ததாகவும், இதனால் அந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டனர்.
வனவிலங்குகளை கொல்வதும் அவற்றை பொதுமக்கள் முன் தொங்கவிடுவதும் குற்றம் எனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
வனவிலங்கு துறை குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிச்சோர் காவல் நிலைய அதிகாரி ஜஸ்விர் சிங் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.