வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார். அவரது உரையில்,
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் போன்ற துணைத் துறைகளைப் பயன்படுத்துவது, விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவும் பாரம்பரிய பயிர்களின் நிலையற்ற தன்மைக்கு ஏற்ற வகையில் செயல்படவும் உதவும்
குறிப்பிட்ட வேளாண் காலநிலை நிலைமைகள் மற்றும் வெவ்வேறு பிராந்தியங்களின் இயற்கை வள தன்மைகளுடன் ஒத்துப்போகும் உற்பத்தி முறைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவது இன்றியமையாததாகும்.
ஆராய்ச்சி மேம்பாடுகளில் முதலீடு செய்யப்படும். குறிப்பாக காலநிலையை எதிர்கொள்ளக்கூடிய வகைகள், மேம்படுத்தப்பட்ட வேளாண் செயல்பாடுகள் மற்றும் காலநிலையை எதிர்கொள்ளக்கூடிய பயிர்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் ஆகியவை நீண்ட கால பயன்களை வழங்கலாம்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு, உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
இ-நாம், எஃப்.பி.ஓ சேவைகளை திறம்பட பயன்படுத்துவது, வேளாண்சந்தைகளில் கூட்டுறவுகள் மேலும தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பங்களிப்பை வழங்க ஆதரவளிப்பது ஆகியவை, விலை நிர்ணயம் மற்றும் சந்தை செயல்திறனை மேம்படுத்த உதவும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய மின் உற்பத்தியில் தமிழகத்துக்கான விநியோகத்தை நிறுத்தக் கூடாது: அன்புமணி

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பான மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


