ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!

வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்.. ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது..
ரூ.5 லட்சத்துடன் பிடிபட்ட  முதல்வர் அலுவலக ஊழியர்.
ரூ.5 லட்சத்துடன் பிடிபட்ட முதல்வர் அலுவலக ஊழியர்.
Published on
Updated on
1 min read

வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தலைநகரான தில்லியில் 70 சட்டபேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டன.

1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் | தில்லி பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

இந்த நிலையில், வாக்குப் பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, தில்லி முதல்வர் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான இருவரையும் தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “பணம் எடுத்துச் செல்வதாக எங்களுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரையும் பிடித்தனர். முதற்கட்ட தகவலின்படி, இருவரும் தில்லி முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிகின்றனர். அவர்களது பெயர் கௌரவ் மற்றும் அஜித் எனத் தெரியவந்துள்ளது

அவர்களிடமிருந்து ரூ 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எங்கிருந்து அவர்கள் எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதுவரை எங்களுக்குத் தெரிந்தபடி, ஒருவர் முதல்வரின் உதவியாளராகப் பணிபுரிந்தவர் என்றும், மற்றொருவர் ஓட்டுநர் என்றும் தெரியவந்துள்ளது” என்றனர்.

கடும் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள வேளையில் தேர்தல் நடைபெறும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக முதல்வர் அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் |மகா கும்பமேளாவில் பிரதமா் இன்று புனித நீராடல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com