
2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார்.
இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், மத்திய பாஜக அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகளை முட்டுக்கட்டையிட்டு தடுத்துவிட்டு, மாநில அரசை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டதைப்போன்று முதல்வர் மமதா பானர்ஜி நாடகமாடுவதாக விமர்சித்தார்.
தொடர்ந்து தர்மேந்திர பிரதான் பேசியதாவது,
மேற்கு வங்கத்தில் கடந்த 2019 முதல் பாஜகவின் வாக்கு விகிதம் 30 - 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடுதலாக 10 சதவீத வாக்குகள் கிடைத்தால் மமதா பானர்ஜியை அதிகாரத்தில் இருந்து பாஜக இறக்கிவிடும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்திலுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களில் பாஜக வெற்றியைப் பதிவு செய்தது. மேற்கு வங்கத்தில் அடுத்து வரவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
ஆம் ஆத்மியின் தவறான வழிகாட்டுதலால் விழிப்படைந்த மக்கள், பாஜகவின் மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இனி இது மற்ற மாநிலங்களிலும் தொடரும் எனக் குறிப்பிட்டார் தர்மேந்திர பிரதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.