
உ.பி.யின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 'கல்ப்வாசி' கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓம் பிரகாஷ் பாண்டே சேவா சன்ஸ்தான் அமைத்த கூடாரத்தில் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகவும், தகவல் கிடைத்ததும் உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று தலைமை தீயணைப்பு அதிகாரி பிரமோத் சர்மா தெரிவித்தார்.
10 நிமிடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் கூடாரம் முற்றிலும் எரிந்தது என்றார். மகா கும்பமேளாவில் மூன்று பெரிய தீ விபத்துகள் நடந்துள்ளன.
முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, மகாகும்பமேளாவில் நகரின் செக்டார் 18 இல் உள்ள இஸ்கான் கூடாரத்தில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள ஒரு டஜன் கூடாரங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாயின.
ஜனவரி 19 அன்று, மகா கும்பமேளா பகுதியின் செக்டார் 19 இல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீயினால் ஒரு டஜன் கூடாரங்கள் எரிந்து நாசமாகின.
அதேபோல், ஜனவரி 25 ஆம் தேதி, மகா கும்பமேளா கண்காட்சி பகுதியின் செக்டார் 2 இல் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக ஒரு காரில் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனத்திற்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.