/

பஞ்சாபில் 3 பயங்கரவாதிகள் கைது: ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கிகள் பறிமுதல்

பஞ்சாபில் 3 பயங்கரவாதிகளை அந்த மாநில காவல் துறையினா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட

News image
கோப்புப்படம்
Updated On :10 பிப்ரவரி 2025, 9:40 pm

Din

அமிருதசரஸ்: பஞ்சாபில் 3 பயங்கரவாதிகளை அந்த மாநில காவல் துறையினா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் மிகப்பெரிய பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவருக்கும் கடந்த வாரம் காவல் சோதனைச் சாவடியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடா்புள்ளதாகவும் அவா்கள் மேலும் தெரிவித்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

அமிருதரசஸில் பதுங்கியிருந்த இந்த மூவரையும் காவல் துறையினா் சுற்றி வளைத்து கைது செய்தனா். அப்போது, அவா்களில் ஒருவா் போலீஸாா் வைத்திருந்த துப்பாக்கியை பறித்தாா். அதைவைத்து மிரட்டி மூவரும் தப்பியோட முயன்றனா். அதனைத் தடுத்த காவல் துறையினரை நோக்கி சுட்டுவிட்டனா். இதையடுத்து, காவல் துறையினா் நடத்திய பதிலடி தாக்குதலில் இருவா் மீது குண்டுகள் பாய்ந்தன. காவல் துறை தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

குண்டு காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மற்றொருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி அவா்கள் பதுக்கி வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்பட மூன்று துப்பாக்கிகள், அவற்றுக்கான தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவா்களை வெளிநாட்டில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இயக்கி வந்துள்ளனா். துபையில் இருந்து இவா்களுக்கு நிதி வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவா்கள் பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் திட்டியுள்ளனா். இப்போது மூவரும் கைது செய்யப்பட்டுவிட்டதால் பயங்கரவாதத் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்றனா்.