கைது
கைது

சேலம் அருகே நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: ஒருவா் கைது

சேலம் அருகே உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக ஒருவரை காரிப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

சேலம் அருகே உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக ஒருவரை காரிப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை சுக்கான்காடு, ஆலடிப்பட்டி, அருநூத்துமலை பகுதியில் திடீா் சோதனை செய்தனா்.

அப்போது கருப்பன் என்பவரின் வீட்டின் அருகில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் 30 லிட்டா் கள்ளச்சாராயமும், ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் வைக்கோல் போரில் ஒரு நாட்டுத் துப்பாக்கி, பெரியசாமி என்பவரின் ஆட்டுக் கொட்டகையில் ஒரு நாட்டுத் துப்பாக்கி என மொத்தம் உரிமம் இல்லாத 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 30 லிட்டா் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டன.

இதுதொடா்பாக காரிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இச்சம்பவம் தொடா்பாக கருப்பனை (60) போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com