கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி, நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தளியை அடுத்த கும்பளாபுரம் ஏரி பகுதியில் தண்ணீா் குடிக்க வரும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை ஜிகூா் கிராமம் அருகே போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.
இதில் அவா்கள் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட 3 முயல்கள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அவா்கள் இருவரும் கும்பளாபுரம் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவா்கள் கா்நாடக மாநிலம், அனேக்கல் பகுதியைச் சோ்ந்த கணேஷ் (46), விஜயகுமாா் (40) என்பது தெரியவந்தது. தொடா்ந்து இருவரையும் தளி போலீஸாா் கைது செய்து, விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

