

பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.7,112 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,406 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 36 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.1,036 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,851 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.7,112 கோடியாக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.5,171 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.6,325 கோடியாக உயா்ந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னா் 0.22 சதவீதமாக இருந்த வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் இறுதியில் 0.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

ஸ்பிக் 3வது காலாண்டு லாபம் ரூ.54.07 கோடி!

என்எல்சி லாபம் ரூ.724 கோடி

ஆக்சிஸ் வங்கி நிகர லாபம் ரூ.6,490 கோடி!

இந்தியன் வங்கி 3-ஆம் காலாண்டு நிகர லாபம் ரூ.3,061 கோடி - 7.33% அதிகரிப்பு
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

