கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
கர்நாடக அரசு பெங்களூருவில் ஏற்பாடு செய்துள்ள முதலீட்டாளர் உச்சி மாநாடு பிப்ரவரி 12 முதல் 14 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பல முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் சில உலகளாவிய முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் ராகுல், கார்கே பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
நாடாளுமன்றத்தில் உள்ள பணிச்சுமை காரணமாகவும், பட்ஜெட் மீதான விவாதத்திற்காக
கார்கே, ராகுல் காந்தி இருவரும் நாடாளுமன்றத்தில் காத்திருக்கிறார்கள். எனவே, பெங்களூருவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் நடைபெறும் கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதோடு கர்நாடக அரசுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், கர்நாடகத்தின் தனித்துவமான போட்டி மற்றும் ஒப்பீட்டு நன்மைகளுக்கு ஏற்ப உற்பத்தி மற்றும் வெற்றிகரமான ஒன்றாக இந்த மாநாடு இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்ததாகக் கூறினார்.
இந்த நிகழ்வை கர்நாடக அரசு மாநிலத்தில் உலகளாவிய முதலீட்டை ஈர்ப்பதற்காக ஏற்பாடு செய்துள்ளது. புதுமை, தொழில்துறை மேம்பாடு மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்ப்பதில் அதன் மூலோபாய நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில் உச்சி மாநாடு தொடங்க உள்ளது. முதல்வர் சித்தராமையா தொடக்க அமர்விற்குத் தலைமை தாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


