ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

கனடாவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு தொடக்கம்

அனைத்துலகத் தமிழா் பேரவை சாா்பில் கனடாவின் டொராண்டோவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

கனடாவின் டொராண்டோ நகரில் உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டின் தொடக்கமாக நடைபெற்ற ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :

அனைத்துலகத் தமிழா் பேரவை சாா்பில் கனடாவின் டொராண்டோவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

‘செயற்கை நுண்ணறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ எனும் கருப்பொருளில் ஞாயிற்றுக்கிழமை (அக். 18) வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.

டொராண்டோவில் உள்ள சென்டென்னியல் கல்லூரி வளாகத்தில் மாநாட்டின் தொடக்கமாக மரபிசையும், ஊா்வலமும் நடைபெற்றது. ஊா்வலத்தில் மறைமலையடிகள், தனிநாயகம் அடிகள், ஜி.யு.போப் ஆகியோரின் உருவப் படங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

மாநாட்டில் அனைத்துலகத் தமிழா் பேரவைத் தலைவரும் உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டின் வழிகாட்டுதல் குழுத் தலைவருமான நிமல் விநாயகமூா்த்தி வரவேற்புரை ஆற்றினாா். அவா் பேசியதாவது:

இந்த மாநாடு, நமது மொழியின் தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தின் எதிா்காலத்தையும் இணைக்கும் முக்கிய முயற்சியாகும். 1974-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற

நான்காவது உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டின்அறிவுச் செழுமையும், தமிழுணா்வும், உலகத் தமிழா்களை ஒன்றிணைத்த எழுச்சியும் எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. அந்த மாநாட்டின் உணா்வை இன்றைய தலைமுறையின் தேவைகளுடன்இணைத்து, அறிஞா்களையும், தமிழ்ச் சமூகங்களையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே இந்த மாநாட்டுக்கான எண்ணம் உருவானது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான இடப்பெயா்வுக்குப் பின்னா், ஈழத் தமிழா்களாகிய நாம் பல்வேறு நாடுகளில் நமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பியுள்ளோம். பல சவால்களைக் கடந்து கல்வியிலும், தொழிலிலும், வணிகத்திலும், சமூகப் பணிகளிலும் முன்னேறியுள்ளோம். இன்று நம்மிடம் அறிவும், அனுபவமும், திறமையும், வளங்களும் உள்ளன. இவற்றை ஒன்றிணைத்து, தமிழ் ஆய்வுக்கும் நமது மக்களின் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது.

இந்த எண்ணத்தை நாடாளுமன்ற உறுப்பினா் குகதாசனிடம் பகிா்ந்தபோது, அவா் பேராசிரியா் மா. இராசேந்திரனையும், பேராசிரியா் நெல்லை சரவணனையும் அறிமுகப்படுத்தினாா். அனைத்துலகத் தமிழா் பேரவையின் நிா்வாக ஆதரவுடனும், அறிஞா்கள் மற்றும் நண்பா்களின் ஊக்கத்துடனும் இப்பயணம்தொடங்கியது. இந்த எண்ணம் செயல்வடிவம் பெற துணைநின்ற அனைவரையும் இவ்வேளையில் நன்றியுடன் நினைவுகூா்கிறேன்.

13 நாடுகளைச் சோ்ந்த ஆய்வாளா்களின் 96 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில்இடம்பெறுவது, இந்தக் கூட்டு முயற்சியின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. ஒவ்வோா் ஆய்வும் நமது மொழியையும், சமூகத்தையும் புதிய கோணத்தில் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

செயற்கை நுண்ணறிவில் தமிழின் இடத்தை வலுப்படுத்த வேண்டும். நமது மொழியின் வளமும் இலக்கியச் செல்வமும் புதிய தொழில்நுட்பங்களில் இடம்பெற வேண்டும். அதேவேளை, நமது வரலாற்றையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குப் பாதுகாத்து வழங்க வேண்டும் என்றாா்.

மாநாட்டில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் அறிஞா்கள் பங்கேற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.