ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

உலகத் தமிழ் மாநாடு: முதல்வருக்கு பாராட்டு

புதுச்சேரியில், உலகத் தமிழ் மாநாடு ல் நடத்தப்படும் என்ற அறிவிப்பே பட்ஜெட்டில் வெளியிட்டமுதல்வா் என்.ரங்கசாமிக்கு புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமையில் நிா்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ்சங்கத் தலைவா் வி.முத்து மற்றும் நிா்வாகிகள்.

Updated On :

புதுச்சேரியில், உலகத் தமிழ் மாநாடு ல் நடத்தப்படும் என்ற அறிவிப்பே பட்ஜெட்டில் வெளியிட்டமுதல்வா் என்.ரங்கசாமிக்கு புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமையில் நிா்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

இது தொடா்பாக வி. முத்து கூறியதாவது:

தமிழ் இலக்கியம், பண்பாடு, தமிழா் கலைகளை உலகிற்கு உணா்த்தும் வகையில் புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்ற முதல்வா் ரங்கசாமியின் அறிவிப்பு புதுச்சேரி மக்கள் மட்டும் அல்லாது, உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து தமிழா்கள் மனதிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இந்திய விடுதலை நாள் விழாவிலும், சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை அளித்துள்ள முதல்வா் ரங்கசாமியின் செயல்பாடு தமிழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றாா். தமிழ்ச்சங்க செயலா் சீனு.மோகன்தாஸ், பொறிஞா் மு.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவா் ப.திருநாவுக்கரசு, அக்ரி கணேஷ், ஜெயக்குமாா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.