
தில்லியில் பாஜக எம்எல்ஏக்களுக்குள் துறை ஒதுக்கீட்டில் உள்கட்சி மோதல் நடைபெற்று வருவதாகப் பதவி விலகவுள்ள முதல்வர் அதிஷி குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றி அதிஷி கூறுகையில்,
பாஜக தலைவர்கள் பொது நிதியைச் சுரண்டுவதற்காக அமைச்சர் பதவிகளுக்காகச் சண்டையிடுவதாகவும், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் இல்லை.
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு ஆம் ஆத்மி கட்சியைக் குறைக்கூற பாஜக திட்டமிட்டுள்ளது. முந்தைய ஆம் ஆத்மி நிர்வாகத்தின் காரணமாக தில்லி அரசிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறுவார்கள்.
ஆம் ஆத்மி அரசின் நிதி சாதனையை எடுத்துரைத்து, தில்லியின் பட்ஜெட் 2014-15-ஆம் ஆண்டில் ரூ. 31,000 கோடியிலிருந்து 2024-25ஆம் ஆண்டில் ரூ. 77,000 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தில்லியின் பட்ஜெட் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு முந்தைய காங்கிரஸ் நிர்வாகத்திலிருந்து பெறப்பட்ட கடனையும் திருப்பிச் செலுத்தியுள்ளது.
பாஜக தனது அனைத்து வாக்குறுதிகளையும், குறிப்பாகப் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்கும் வாக்குறுதியை எந்த தாமதமும் இன்றி செயல்படுத்த வேண்டும்.
சமீபத்தில் நடந்துமுடிந்த பேரவைத் தேர்தலில் 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி பேரவைக்கு பாஜக 48 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் முதல்வர் மற்றும் அமைச்சரவையை அறிவிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.