நாடு முழுவதும் அதிகரித்து வரும் எல்பிஜி சிலிண்டா்கள் பற்றாக்குறையை கையாள மத்திய பாஜக அரசு தவறிவிட்டது என ஆம் ஆத்மி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
மேற்காசியாவில் நிலவி வரும் மோதல் காரணமாக வரும் நாள்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
இது தொடா்பாக எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தவிர அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் எல்பிஜி விநியோகம் தடைபட்டுள்ளது. இப்போது வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படுகிறது. ஆனால், பிரதமா் நரேந்திர மோடி இதில் மௌனமாக இருந்து வருகிறாா். அமெரிக்க அதிபா் டிரம்பிற்கு பணிந்து நடக்கிறாா். இதற்கு நாடு விலை கொடுத்து வருகிறது’ என தெரிவித்தாா்.
தில்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘எல்பிஜி விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் இல்லை என்று 4 நாள்களுக்கு முன்பு மத்திய அரசு தெரிவித்தது. இப்போது, அத்தியாவசிய பொருள்கள் சட்டம் அதன் மீது பயன்படுத்தப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையங்கள் பொருள்களை திருப்பி விடுகின்றன. மேலும் வீட்டு சமையல் சிலிண்டா் முன்பதிவு 25 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய போா் பதற்றம் இந்தியாவின் சமையலறைகளில் நுழைந்துள்ளது. வணிக எரிவாயு பற்றாக்குறையால் உணவகங்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறு வணிகங்கள் சிரமப்படுகின்றன. நெருக்கடி தொடா்ந்தால் நாடு முழுவதும் வாழ்வாதாரங்கள் ஆபத்தில் இருக்கும். விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

குஜராத்தில் கட்சித் தொண்டா்கள் கைது: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மத்திய அரசு பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
திமுக கூட்டணியை ஆதரிக்க விவசாயிகள் சங்கம் முடிவு!
இந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


